கமுதி அருகே முன்விரோதத்தில் வாலிபர் கொலை


கமுதி அருகே முன்விரோதத்தில் வாலிபர் கொலை
x
தினத்தந்தி 28 Feb 2020 10:15 PM GMT (Updated: 2020-02-29T01:27:07+05:30)

கமுதி அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கமுதி,

கமுதி கோவிலாங்குளம் அருகே ஒச்சத்தேவன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகநாதன். இவருக்கும், மறவர் கரிசல் குளத்தை சேர்ந்த பழனிநாதன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பழனிநாதன் ஒச்சத்தேவன்கோட்டை கிராமத்திற்கு வந்த போது, சண்முகநாதன் தரப்பினர் அவரை தாக்கினராம். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.

இதனால் சண்முகநாதனை பழிவாங்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலாங்குளம் அருகே கொம்பூதி விலக்கு ரோட்டில் சண்முகநாதனின் தம்பி நேதாஜி (வயது 20) நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டது. இதில் நேதாஜி பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேந்திரன், கோவிலாங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story