வைத்தீஸ்வரன்கோவிலில் மாறுவேடத்தில் சென்று பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்த அதிகாரி


வைத்தீஸ்வரன்கோவிலில் மாறுவேடத்தில் சென்று பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்த அதிகாரி
x
தினத்தந்தி 29 Feb 2020 4:21 AM IST (Updated: 29 Feb 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

வைத்தீஸ்வரன்கோவிலில் மாறுவேடத்தில் சென்று அதிகாரி ஒருவர் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தார்.

சீர்காழி,

நாகை மாவட்டம்சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற பேரூராட்சி செயல் அதிகாரி குகன்,நேற்று வேட்டி, சட்டையுடன் தலையில் முண்டாசு கட்டி கொண்டு மாறு வேடத்தில் வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள கடைகளில் பாலித்தீன் பைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என கண்காணித்தார்.

அப்போது பல கடைகளில் பாலித்தீன் பை பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்காரர்களை எச்சரித்த அவர், 3 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தார். மாறுவேடத்தில் அதிகாரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது வியாபாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Next Story