திருவண்ணாமலையிலிருந்து 3 குளிர்சாதன பேருந்து உள்பட 11 புதிய பஸ்கள் இயக்கம் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையிலிருந்து 3 வழித்தடங்களில் புதிய குளிர்சாதன பஸ் போக்குவரத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையிலிருந்து மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கோவை, திருப்பூர் வழித்தடத்தில் 3 புதிய குளிர்சாதன பஸ்கள் உட்பட 11 புதிய பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விழா நேற்று திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர் தசரதன், துணை மேலாளர் (வணிகம்) ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு குளிர்சாதன பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களுடன் பஸ்சில் பயணம் மேற்கொண்டார்.
இதில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி. வனரோஜா, முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், பணிமனை கிளை மேலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மண்டலம் மூலமாக 11 புதிய பஸ்கள் தொடங்கப்பட்டது. இதில் திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு செங்கம், ஊத்தங்கரை, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் தடம் எண் 434 என்ற எண்ணுள்ள குளிர்சாதன பஸ் திருவண்ணாமலையில் இரவு 10.15 மணிக்கும், கோவையில் பகல் 11.15 மணிக்கும் புறப்படுகிறது. திருவண்ணாமலையில் இருந்து திருப்பூருக்கு செங்கம், ஊத்தங்கரை, சேலம் வழித்தடத்தில் செல்லும் குளிர்சாதன பஸ் (தடம் எண் 435) திருவண்ணாமலையில் இரவு 9.40 மணிக்கும், திருப்பூரில் பகல் 10.27 மணிக்கும் புறப்படுகிறது. திருவண்ணாமலையில் இருந்து திருப்பூருக்கு தானிப்பாடி, அரூர், சேலம் வழித்தடத்தில் செல்லும் குளிர்சாதன பஸ் (தடம் எண் 435) திருவண்ணாமலையிலிருந்து பகல் 12.50-க்கும், திருப்பூரில் இருந்து இரவு 10 மணிக்கும் புறப்படுகிறது.

காஞ்சீபுரத்தில் இருந்து சேலத்திற்கு வந்தவாசி, திருவண்ணாமலை, ஊத்தங்கரை வழித்தடத்தில் தடம் எண்.437 கொண்ட பஸ்சும், இதே ஊர்களுக்கிடையே செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை, ஊத்தங்கரை வழித்தடத்தில் 2 பஸ்களும், சென்னையில் இருந்து சேலத்திற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர் வழித்தடத்தில் 4 பஸ்கள் என 8 புதிய சாதாரண பஸ்களும் இயக்கப்படுகிறது என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story