கழுகுமலை, கயத்தாறு பகுதியில் ஆவின் பாலகம்–கால்நடை கிளை நிலையங்கள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்


கழுகுமலை, கயத்தாறு பகுதியில் ஆவின் பாலகம்–கால்நடை கிளை நிலையங்கள்  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 11 March 2020 4:30 AM IST (Updated: 10 March 2020 7:24 PM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை, கயத்தாறு பகுதியில் ஆவின் பாலகம், கால்நடை கிளை நிலையங்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

கழுகுமலை, 

கழுகுமலை, கயத்தாறு பகுதியில் ஆவின் பாலகம், கால்நடை கிளை நிலையங்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

ஆவின் பாலகம் 

கழுகுமலை விநாயகர் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் புதிதாக ஆவின் பாலகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர், கயத்தாறு அருகே துரைச்சாமிபுரம், கட்டாலங்குளம், ராஜாபுதுக்குடி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை கிளை நிலையங்களை திறந்து வைத்தார்.

குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் 

பின்னர் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ இயக்கி தொடங்கி வைத்தார்.

விழாவில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சத்திய நாராயணன், உதவி இயக்குனர் சுரேஷ், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story