மானூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து மின்வாரிய ஊழியர் சாவு நாய் குறுக்கே பாய்ந்தால் பரிதாபம்

மானூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
மானூர்,
மானூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார். நாய் குறுக்கே பாய்ந்ததால் இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
மின்வாரிய ஊழியர்
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 58). இவர் தாழையூத்தில் மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 3–ந் தேதி ராமையன்பட்டி போலீஸ் காலனியில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
நெல்லை– சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் வந்தபோது திடீரென ஒரு நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார்சைக்கிளை திருப்பியபோது, மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதனால் அவர் மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்தார்.
பரிதாப சாவு
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் மணி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து மானூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சையத் நிஷார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மணிக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், திருமணமான ஒரு மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story