மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: அலுவலகத்துக்கு வெளியே நின்று மனுக்கள் வாங்கிய கலெக்டர் + "||" + Corona virus threat echo: Standing outside the office Collector of petitions

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: அலுவலகத்துக்கு வெளியே நின்று மனுக்கள் வாங்கிய கலெக்டர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: அலுவலகத்துக்கு வெளியே நின்று மனுக்கள் வாங்கிய கலெக்டர்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே நின்று மக்களிடம் கலெக்டர் பல்லவி பல்தேவ் மனுக்கள் வாங்கினார்.
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. அதன்படி நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. வழக்கமாக மக்கள் தங்களின் மனுக்களை பதிவு செய்து, கூட்டரங்கில் வரிசையில் நின்று கலெக்டரிடம் மனுவை அளிப்பார்கள். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வரும் மக்கள், மனுக்களை பதிவு செய்யவும், அதை கூட்டத்தில் அளிக்கவும் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதால் அவற்றை தவிர்க்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே நின்று பொதுமக்களிடம் கலெக்டர் பல்லவி பல்தேவ் மனுக்களை வாங்கினார். பின்னர், அவை மொத்தமாக பதிவு செய்யப்பட்டது. இதற்கான மனு ரசீது தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், 34 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

மேலும், குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட்டது. இந்த பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். அத்துடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை, பொதுமக்களுடன் இணைந்து கலெக்டர் பல்லவி பல்தேவ் பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சுறுத்தலால் மாவட்ட எல்லைகள் மூடல்: 144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. 144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
2. பள்ளி, கல்லூரிகளில் ‘கொரோனா’ வைரஸ் விழிப்புணர்வு - கலெக்டர் தகவல்
பள்ளி, கல்லூரிகளில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3. 73 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம், குடியரசு தின விழாவில் கலெக்டர் வழங்கினார்
தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 73 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை குடியரசு தின விழாவில் கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கி பாராட்டினார்.
4. 4 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் பல்லவி பல்தேவ் தகவல்
தேனி மாவட்டத்தில் 4 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
5. தேர்தல் வெளிப்படையாக நடப்பதை உறுதி செய்ய ஒன்றிய அளவில் அமைக்கப்பட்ட குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம் - கலெக்டர் உத்தரவு
தேர்தல் வெளிப்படையாக நடப்பதை உறுதிசெய்ய ஒன்றிய அளவில் அமைக்கப்பட்ட நடத்தை விதிகள் அமலாக்கக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.