மாவட்ட செய்திகள்

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு - கலெக்டர் ‌ஷில்பா அறிவிப்பு + "||" + Arrangements to provide equipment for athletes who won medals at national level - Announced by Collector Shilpa

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு - கலெக்டர் ‌ஷில்பா அறிவிப்பு

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு - கலெக்டர் ‌ஷில்பா அறிவிப்பு
தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை, 

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடந்த 1-4-2018 முதல் 31-3-2019 வரையிலும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

தங்க பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும், வெள்ளி பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும், வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது.

எனவே தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றவர்கள், தங்களது பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் வருகிற 31-ந்தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) ‘மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டு அரங்கம், பாளையங்கோட்டை, நெல்லை’ என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: வெளிநாட்டில் இருந்து நெல்லை வந்த 158 பேர் தீவிர கண்காணிப்பு - கலெக்டர் ‌ஷில்பா தகவல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து நெல்லை வந்த 158 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ‌ஷில்பா கூறினார். இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
2. கங்கைகொண்டானில் மனுநீதி நாள் முகாம்: 113 பேருக்கு ரூ.47¼ லட்சத்தில் நலத்திட்ட உதவி - கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார்
கங்கைகொண்டானில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 113 பேருக்கு ரூ.47¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார்.
3. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் - கலெக்டர் ‌ஷில்பா தகவல்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் ‌ஷில்பா கூறிஉள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
4. நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தால் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன - கலெக்டர் ‌ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தால் அனைத்து ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளதாக, கலெக்டர் ‌ஷில்பா தெரிவித்தார்.
5. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக பகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது - கலெக்டர் ‌ஷில்பா பேட்டி
உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக பகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது என்று கலெக்டர் ‌ஷில்பா கூறினார்.