மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவை மீறிய 7 பேரின் வாகனம், ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக ரத்து - கலெக்டர் அதிரடி நடவடிக்கை + "||" + 144 in violation of the injunction Permanent revocation of driving vehicle of 7 persons Collector Action

144 தடை உத்தரவை மீறிய 7 பேரின் வாகனம், ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக ரத்து - கலெக்டர் அதிரடி நடவடிக்கை

144 தடை உத்தரவை மீறிய 7 பேரின் வாகனம், ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக ரத்து - கலெக்டர் அதிரடி நடவடிக்கை
144 தடை உத்தரவை மீறி வெளியே வாகனங்களை ஓட்டியதால் 7 பேரின் வாகனம், ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது.
வேலூர், 

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்தால் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்பதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்தனர். எனினும் ஒருசிலர் வெளியே தங்களது இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளனர். ஆட்டோக்களையும் இயக்கி வருகின்றனர்.

இதை தடுக்கும் வகையில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும், கைது செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மூலம் எண்ணற்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

எனினும் பலருக்கு வைரஸ் தொற்று குறித்த பயமில்லாமல் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து வாகனங்களின் உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

பின்னர் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேவையில்லாமல் வெளியே வந்த 3 பேரின் இருசக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். மேலும் கலெக்டரின் அதிரடி உத்தரவின் பேரில் 7 பேரின் வாகன உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 17–ந் தேதிக்கு பின்னர் பொது ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனை தொடரும் எனவும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, உரிமங்கள் ரத்து செய்யப்படும் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் மாவட்டத்தில், குடிமராமத்து திட்டத்தில் 14 ஏரிகள் தூர்வாரப்படும் - கலெக்டர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் 14 ஏரிகள் தூர்வாரப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
2. ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள் வீட்டில் இருந்தபடி தொழுகை செய்ய வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள் மசூதிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி தொழுகை செய்ய வேண்டும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
3. இன்று முதல் நடக்கிறது, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் - கலெக்டர் தகவல்
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 16 பேரும் வசித்த தெருவில் உள்ளவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர்: கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க பாரம்பரிய மருத்துவம் பயனளிக்கிறது - கலெக்டர் தகவல்
கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க பாரம்பரிய மருத்துவம் பயனளிக்கிறது என்றும், அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது என்றும் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5. கொரோனாவுக்கு ஒருவர் பலி எதிரொலி: மாவட்டம் முழுவதும் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் - இன்று முதல் அமல்
கொரோனாவுக்கு ஒருவர் பலியானதன் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-