அரியலூரில், கிருமி நாசினி சுரங்கம் திறப்பு
அரியலூரில் பஸ் நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் 2 இடங்களிலும் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டது.
அரியலூர்,
ஊரடங்கு உத்தரவால் அரியலூர் பஸ் நிலையம், சின்னக்கடை தெரு பகுதியில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வதால், 2 இடங்களிலும் தனியார் பங்களிப்புடன் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டது. இந்த சுரங்கத்தை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்து, அதன் வழியாக சென்று வந்தார். பின்னர் அவர் பஸ் நிலையத்திலும், அரசு மருத்துவமனையிலும் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை ஆய்வு செய்து, அங்கு தயாரிக்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார். நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, நகராட்சி ஆணையர் குமரன், தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அரியலூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு நீர்மோர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை அ.தி.மு.க. சார்பில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்.
Related Tags :
Next Story