மாவட்ட செய்திகள்

கொரோனாவில் இருந்து குணமடைந்த இந்திபட தயாரிப்பாளர் மகள் - ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் + "||" + From Corona Recovering Daughter of Hindi filmmaker He returned home from the hospital

கொரோனாவில் இருந்து குணமடைந்த இந்திபட தயாரிப்பாளர் மகள் - ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்

கொரோனாவில் இருந்து குணமடைந்த இந்திபட தயாரிப்பாளர் மகள் - ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்
இந்திபட தயாரிப்பாளர் கரீம் மொரானி மகள் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.
மும்பை, 

பிரபல இந்தி பட தயாரிப்பாளர் கரீம் மொரானி. இவர் ரா ஒன், தில்வாலே உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார். இவரது மகள் சாஷா கடந்த மார்ச் முதல் வாரத்தில் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பினார். இவருக்கு கடந்த 7-ந் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் கோகிலா பென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து சகோதரி சோயா, தந்தை கரீம் மொரானிக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் சாஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.

இதுகுறித்து சாஷாவின் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘சாஷா நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்’’ என்றனர். மேலும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தது குறித்து சாஷா சமூகவலைதளத்தில் கூறும்போது, ‘‘ஆஸ்பத்தரிக்கு சென்ற பிறகு நிம்மதியாக உணர்ந்தேன். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2-வது நாள் முதல் உடல் நலம் தேறினேன். ஆஸ்பத்திரிக்கு சென்றது நான் எடுத்த சிறந்த முடிவாக அமைந்தது. உடனடியாக குணமாகியதாக உணர்கிறேன்’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர் நடிகர் ராக்லைன் சுதாகர் திடீர் மரணம் - படப்பிடிப்பின் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நடிகர் ராக்லைன் சுதாகர், படப்பிடிப்பில் பங்கேற்ற போது திடீரென மரணம் அடைந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.
2. கொரோனாவில் இருந்து மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் குணமடைந்தார்
கொரோனாவில் இருந்து மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் குணமடைந்துள்ளார்.
3. கொரோனாவில் இருந்து ஈரோடு கலெக்டர் குணமடைந்தார் - நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு
கொரோனாவில் இருந்து ஈரோடு கலெக்டர் சி.கதிரவன் குணமடைந்தார். அவர் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
4. கொரோனாவில் இருந்து குணமானது எப்படி? - நடிகர் விஷால் விளக்கம்
கொரோனாவில் இருந்து குணமானது எப்படி என்பது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
5. கொரோனாவில் இருந்து மீண்டு மந்திரி அசோக் சவான் வீடு திரும்பினார்
கொரோனாவில் இருந்து மீண்டு மந்திரி அசோக் சவான் வீடு திரும்பினார்.