கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் 20-ந் தேதி முதல் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி - தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய் தகவல்


கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் 20-ந் தேதி முதல் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி - தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய் தகவல்
x
தினத்தந்தி 17 April 2020 4:34 AM IST (Updated: 17 April 2020 4:34 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் 20-ந் தேதி முதல் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என மந்திரி சுபாஷ் தேசாய் தெரிவித்தார்.

மும்பை,

மராட்டிய தலைநகரும், நாட்டின் நிதி தலைநகருமான மும்பையை கொடிய கொரோனா வைரஸ் புரட்டி போட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. நிறுனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து உள்ளது. 

இந்தநிலையில் மராட்டியத்தில் வருகிற 20-ந் தேதி முதல் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் தொழிற்சாலைகள் செயல்பட வாய்ப்பு உள்ளதாக மாநில தொழில் துறை மந்திரி சுபாஷ் தேசாய் கூறினார்.

தொழில் துறை மூத்த அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய பிறகு அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி...

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் வருகிற 20-ந் தேதி முதல் தொழிற்சாலைகள் செயல்பட வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி வழங்கப்படும்’’ என்றார்.

Next Story