மாவட்ட செய்திகள்

சேத்தியாத்தோப்பு அருகே, பெண் கொலையில் மேலும் 3 பேர் கைது + "||" + Near Sethyathope, 3 more arrested in woman murder

சேத்தியாத்தோப்பு அருகே, பெண் கொலையில் மேலும் 3 பேர் கைது

சேத்தியாத்தோப்பு அருகே, பெண் கொலையில் மேலும் 3 பேர் கைது
சேத்தியாத்தோப்பு அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ஜோதி (வயது 40). இவரது மனைவி ரேவதி (36). இந்த நிலையில் ரேவதியின் நடத்தை மீது சந்தேகமடைந்த அவரது தந்தையான கொழை கிராமத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் உறவினர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அவரை அடித்து கொலை செய்தனர்.

இதுகுறித்து தூண்டுதலின் பேரில் கொலை செய்யப்பட்டதாக கூறி 15-க்கும் மேற்பட்டோர் மீது சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேட்டு தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் பிரசாந்த் (28), வீரமுடையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் செல்வவிநாயகம் (24), அதே ஊரைச் சேர்ந்த வீர அரசு மகன் வீரபாண்டியன் (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கடத்தல்; 3 பேர் கைது
மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. கோஷ்டி மோதல்; 3 பேர் கைது
தேனி அருகே நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மணல் கடத்த முயன்ற 3 பேர் கைது
தக்கோலம் அருகே மணல் கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. மாங்காடு அருகே, டிரைவர் கொலையில் 3 பேர் கைது - கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது அம்பலம்
மாங்காடு அருகே டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததால் அவரை கொன்றதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
5. லாலாப்பேட்டை அருகே, பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 3 பேர் கைது
லாலாப்பேட்டை அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.