அய்யர்மலை அரசு பள்ளியில் ரூ.85 ஆயிரம் பொருட்கள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


அய்யர்மலை அரசு பள்ளியில் ரூ.85 ஆயிரம் பொருட்கள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 May 2020 10:02 AM IST (Updated: 2 May 2020 10:02 AM IST)
t-max-icont-min-icon

அய்யர்மலை அரசு பள்ளியில் ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குளித்தலை, 

அய்யர்மலை அரசு பள்ளியில் ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு பள்ளியில் திருட்டு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியும் மூடப்பட்டுள்ளது. இதனால் இப்பள்ளியில் நாகராஜன் என்பவர் காவலாளியாக உள்ளார். இந்தநிலையில், வழக்கம்போல் கடந்த 30-ந்தேதி இரவு பணி முடிந்து, நாகராஜன் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் காலைக்கு பணிக்கு வந்தார். அப்போது பள்ளியின் பின்புறம் உள்ள கட்டிடத்தின் அறை கதவின் பூட்டு உடைந்து கிடந்தது. இதுகுறித்து நாகராஜன், பள்ளியின் தலைமையாசிரியர் சக்திவேலுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், அங்கு வந்த தலைமையாசிரியர் சக்திவேல், பள்ளியில் திருட்டு நடந்ததை உறுதி செய்து, இதுகுறித்து குளித்தலை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

வலைவீச்சு

இதையடுத்து போலீசார் வந்து விசாரணை நடத்தியதில், மாணவர்களுக்கு பாடம் நடத்த பயன்படுத்தப்படும் புரஜெக்டர், பேட்டரி உள்பட ரூ.85 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story