பெரம்பலூர் அருகே 250 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு 2 பேர் கைது
பெரம்பலூர் அருகே சாராயம் தயாரிக்க போட்ட 250 லிட்டர் ஊறலை போலீசார் அழித்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே சாராயம் தயாரிக்க போட்ட 250 லிட்டர் ஊறலை போலீசார் அழித்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
சாராயம் தயாரிக்க ஊறல்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள், சாராயம், கள்ளு ஆகியவை விற்பனை செய்யப்படுகிறதா? மற்றும் சாராயம் தயாரிக்க ஊறல் போடப்படுகிறதா? என்ப தனை சோதனையிட பெரம் பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் மனோஜ் தலைமையில் ஏட்டுகள் பாலமுருகன், ஆறுமுகம் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது லாடபுரம் பகுதியில் ஒருவரின் வயலில் வைக்கோல் போரில் அதே ஊரைச் சேர்ந்த ராஜாங் கம் மகன் செல்வகுமார் (வயது 34), மயில் வாசு தேவன்(45) ஆகியோர் சாராயம் தயாரிக்க 250 லிட்டர் ஊறலை பிளாஸ் டிக் பேரல், மண்பானைகள் உள்ளிட்டவையில் போட்டு மறைத்து வைத்திருந்தது போலீசாரால் கண்டு பிடிக்கப் பட்டது.
2 பேர் கைது
இதையடுத்து சாராய ஊறலை பறிமுதல் செய்த போலீசார், அதனை கீழே ஊற்றி அழித்தனர். மேலும் சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட செல்வகுமார், மயில் வாசுதேவன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். மேலும் தலைமறைவான மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story