திருச்சி மாவட்டத்தில் 6-ந் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழில்கள் விவரம்

திருச்சி மாவட்டத்தில் 6-ந் தேதி முதல் எந்தெந்த தொழில்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பது பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் 6-ந் தேதி முதல் எந்தெந்த தொழில்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பது பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை பிறப்பித்து அரசு உத்தரவிட் டுள்ளது.
ஜவுளி, நகைக் கடைகள்
அதன்படி திருச்சி மாவட்டத்தில் 6-ந் தேதி முதல் பெரிய தொழிற்சாலைகள் தனியாக விண்ணப்பம் செய்து அனுமதி பெறவேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் செயல்படலாம். ஊரக பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் செயல்படலாம். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.டி) 50 சதவீத பணியாளர்களை கொண்டு குறைந்தபட்சம் 20 நபர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், டீ கடைகள், முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள், மசாஜ் நிலையங்கள், நான்கு சக்கர, இருசக்கர வாகன விற்பனை நிலையங்கள், நகைக் கடைகள், குளிர்பதன வசதியுடன் கூடிய ஜவுளிக்கடைகள் திறப்பதற்கு அனுமதி இல்லை. கார், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஓட்டுவதற்கு அனுமதி இல்லை.
கட்டுமான பணிகள்
நகர்ப்புற பகுதிகளில் கட்டுமான பணிகள், பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளர்கள் ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்து வர அனுமதிக்கப்படும். தினசரி அழைத்து வர அனுமதி கிடையாது.
ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மட்டும் வணிக செயல்பாடுகளும் மருத்துவ பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவங்கள், ஏ.டி.எம். ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து செயல்படலாம்.
இந்த அறிவிப்பின்படி நோய் தடுப்பு கட்டுப்பாடு பகுதிகளில் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்.
பள்ளி, கல்லூரிகள்
பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை. வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு விதிக் கப்பட்ட தடை நீடிக்கும். திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகம், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்டஅரங்குகள் மற்றும் ஊர்வலங்களுக்கான தடை நீடிக்கும். பஸ், ரெயில், விமான போக்குவரத்துக்கான தடை நீடிக்கும். ஓட்டல், ரிசார்ட்டுகள் செயல்படாது. இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story