திருச்சி, புதுக்கோட்டையை சேர்ந்த 5 கொரோனா நோயாளிகள் குணமாகி வீடு திரும்பினர்

திருச்சி மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 5 கொரோனா நோயாளிகள் குணமாகி வீடு திரும்பினர்.
திருச்சி,
திருச்சி மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 5 கொரோனா நோயாளிகள் குணமாகி வீடு திரும்பினர்.
கொரோனா நோயாளிகள்
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 51 பேர், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். அவர் களில் ஏற்கனவே 47 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர். 4 பேர் மட்டும் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து திருச்சிக்கு வருகை புரிந்தவர்கள் மற்றும் இதர மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்தவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கடந்த 4-ந் தேதி 4 பேருக்கும், 5-ந் தேதி 2 பேருக்கும் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 10 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
5 பேர் வீடு திரும்பினர்
இதற்கிடையே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பெற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் பூரண குணமாகி நேற்று வீடு திரும்பினர். இதுபோல புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் குணமாகி வீடு திரும்பினார். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ஏகநாதன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் பழங்கள் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வழியனுப்பி வைத்தனர்.
தற்போது திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 29 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story