சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரூ.75 லட்சம் கடன் உதவி அமைச்சர் கந்தசாமி வழங்கினார்


சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரூ.75 லட்சம் கடன் உதவி அமைச்சர் கந்தசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 7 May 2020 11:06 PM GMT (Updated: 2020-05-08T04:36:06+05:30)

சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரூ.75 லட்சம் கடன் உதவி அமைச்சர் கந்தசாமி வழங்கினார்.

பாகூர்,

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சுயஉதவிக்குழு பெண்களின் குடும்ப உணவு மற்றும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய கொரோனா சிறப்பு கடன் வழங்கப்படுகிறது. அதன்படி கிருமாம்பாக்கம் இந்தியன் வங்கி கிளை, புதுவை பாரதியார் வங்கி ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம் கிளைகளில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு 55 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 753 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.75 லட்சத்து 30 ஆயிரம் கடன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கிருமாம்பாக்கம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் பிரபாத்ரஞ்ஜன், பாரதியார் வங்கி கிளை மேலாளர்கள் சரஸ்வதி, உதயனன், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கதிர்வேல், வட்டார இணைப்பு அதிகாரி சாந்தமூர்த்தி, விரிவாக்க அதிகாரிகள் சுப்பிரமணியன், தனசேகர் மற்றும் சுயஉதவிக்குழு பெண்கள் கலந்துகொண்டனர்.

Next Story