மாவட்ட செய்திகள்

குடியாத்தத்தில், வேலூர் சரக டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு + "||" + In Settlement, Vellore SARAKA DIG. Sudden study

குடியாத்தத்தில், வேலூர் சரக டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு

குடியாத்தத்தில், வேலூர் சரக டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
குடியாத்தத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
குடியாத்தம்,

குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காட்பாடி ரோடு, நான்கு முனை சந்திப்பு, புதிய பஸ் நிலையம், நேதாஜி சவுக் ஆகிய இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை திடீரென வாகன சோதனை நடைபெறும் பகுதியில் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு பணியில் இருந்த காவல்துறையினர், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் உள்ளே வரும்போது சோதனை செய்து உரிய ஆவணங்கள் உள்ளதா? என சரி பார்த்த பின்னர் நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என்றார்.

ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.