அறுவடை செய்ய தொழிலாளர்கள் கிடைக்காததால் தீ வைத்து எரிக்கப்படும் கரும்பு தோட்டங்கள்


அறுவடை செய்ய தொழிலாளர்கள் கிடைக்காததால் தீ வைத்து எரிக்கப்படும் கரும்பு தோட்டங்கள்
x
தினத்தந்தி 13 May 2020 11:11 AM IST (Updated: 13 May 2020 12:04 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக அறுவடை செய்ய தொழிலாளர்கள் கிடைக்காததால் கரும்பு தோட்டத்தை விவசாயிகள் தீ வைத்து எரித்து வருகின்றனர்.

வடகாடு, 

ஊரடங்கு காரணமாக அறுவடை செய்ய தொழிலாளர்கள் கிடைக்காததால் கரும்பு தோட்டத்தை விவசாயிகள் தீ வைத்து எரித்து வருகின்றனர்.

கரும்புகள் தீ வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் அரவை கரும்புகள் பயிரிட்டுள்ளனர். இங்கு பயிரிட்டுள்ள அரவை கரும்புகளை விழுப்புரம், பண்ருட்டி போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்து, இப்பகுதிகளில் தங்கியிருந்து அரவை கரும்புகளை வெட்டி கொடுத்து வந்தனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக, தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் அரவை கரும்புகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். தங்களது தோட்டங்களில் அரைகுறையாக வெட்டப்பட்ட நிலையில் இருக்கும் அரவை கரும்புகள் மாத கணக்கில் வெட்டப்படாமல் இருப்பதால் ஒருசில விவசாயிகள் அரவை கரும்புகளை தீ வைத்து பாதுகாப்பாக எரித்து வருகின்றனர்.

கோரிக்கை

இதுகுறித்து அரவை கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறும்போது, தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் இல்லாததால் கரும்புகள் வெட்டப்படாமல் உள்ளது. இதனால் கரும்புகள் எடை குறைந்து ஒன்றுக்கும் உதவாமல் போய்உள்ளது. இதனால் மாற்று விவசாயம் செய்வதற்கு கரும்புகளை தீ வைத்து அழித்து வருகிறோம். பயிரிட்டுள்ள அரவை கரும்புகளுக்கு அரசு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினர்.

Next Story