கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்டிகளுடன் திரண்டு வந்த வடமாநில தொழிலாளர்கள் போலீசார் திருப்பி அனுப்பினார்கள்
திருச்சி அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். கொரோனாவிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இவர்களில் 6 பேர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பெட்டி மற்றும் தங்களது உடைமைகளுடன் வந்த அவர்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மே 15-ந்தேதி (நேற்று) இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரெயிலில் செல்வதற்கு முன் பதிவு செய்து இருப்பதால் தாங்கள் சென்னை செல்வதற்கு வாகன வசதி செய்து தரவேண்டும் என கேட்டனர். ஆனால் போலீசார் அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. முறைப்படி இ- பாஸ் வாங்கி செல்லும்படி கூறி அனுப்பி வைத்தனர்.
இதே போல் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த சுமார் 20 தொழிலாளர்களும் நேற்று பெட்டிகளுடன் வந்தனர். அவர்களுக்கும் இதே பதிலை சொல்லி போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
Related Tags :
Next Story