டாக்டர்கள் - ஆசிரியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு முழுகவச உடை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்


டாக்டர்கள் - ஆசிரியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு முழுகவச உடை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்
x
தினத்தந்தி 19 May 2020 11:02 AM IST (Updated: 19 May 2020 11:02 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சி.பி.எஸ்.இ. பள்ளி நிர்வாகிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஈரோடு இந்தியன் பப்ளிக் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில், டாக்டர்கள் மற்றும் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு முழுகவச உடை வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடந்தது.


ஈரோடு, 

 பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, 2 ஆயிரத்து 500 பேருக்கு ரூ.600 மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு முழுகவச உடைகளை வழங்கினார்.

இதில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, தமிழ்நாடு சி.பி.எஸ்.இ. பள்ளி நிர்வாகிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொருளாளர் சோமசுந்தரம், கோவை மண்டல தலைவர் சிவ்குமார் மற்றும் நிர்வாகிகள் ஹேமா, நவமணி, கலைவாணன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story