மாவட்ட செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையம் செல்வதற்காக ரஷிய விஞ்ஞானிகள் 6 பேர் தனி விமானத்தில் மதுரை வந்தனர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது + "||" + Six Russian scientists arrived in Madurai on a separate plane Corona testing conducted

கூடங்குளம் அணுமின் நிலையம் செல்வதற்காக ரஷிய விஞ்ஞானிகள் 6 பேர் தனி விமானத்தில் மதுரை வந்தனர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது

கூடங்குளம் அணுமின் நிலையம் செல்வதற்காக ரஷிய விஞ்ஞானிகள் 6 பேர் தனி விமானத்தில் மதுரை வந்தனர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது
கூடங்குளம் அணுமின் நிலையம் செல்வதற்காக தனி விமானம் மூலம் ரஷிய விஞ்ஞானிகள் 6 பேர் மதுரை வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
மதுரை, 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷிய நாட்டு நிதிஉதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. தற்போது முதலாவது அணுஉலையில் 420 மெகாவாட் மின்உற்பத்தியும், 2-வது அணுஉலையில் 900 மெகாவாட் மின்உற்பத்தியும் நடைபெறுகிறது. மேலும் 3, 4-வது அணுஉலைகள் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கான உபகரணங்கள் ரஷியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு கூடங்குளத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வது அணுஉலையில் உள்ள ஜெனரேட்டரில் அதிர்வு காரணமாக பழுது ஏற்பட்டதாகவும், அப்போது அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகளால் பழுதை சீரமைக்க முடியாததால், 3-வது அணு உலைக்காக வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மதுரை வருகை

தற்போது ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக ரஷியாவில் உள்ள பவர் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அமோசோவ் மிகைல், போபெஸ்கு எவ்ஜெனி, குசரோவ் விளாடிமிர், ஸ்ட்ரோகனோவ் மிகைல், ஷராபுதாடினோவ் அலெக்சாண்டர், ஷக்வெர்டீவ் வாகித் ஆகிய 6 பேர் வந்தனர்.

இதற்காக ரஷியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத் வந்தடைந்து, பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தது தெரிய வந்தது. அவர்களை கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் வரவேற்று கார் மூலம் கூடங்குளத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக அவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் வைத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பரிசோதனை

இதேபோல் அவர்கள் 6 பேருக்கும் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் செட்டிகுளம் அணுவிஜய் நகரியத்தில் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.