வெளியூரில் இருந்து வியாபாரிகள் வராததால் மண்டியில் வாழைத்தார்கள் தேக்கம் விவசாயிகள் வேதனை
வெளியூரில் இருந்து வியாபாரிகள் வராததால் மண்டியில் வாழைத்தார்கள் தேக்கம் அடைந்துள்ளன.இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
லாலாபேட்டை,
வெளியூரில் இருந்து வியாபாரிகள் வராததால் மண்டியில் வாழைத்தார்கள் தேக்கம் அடைந்துள்ளன.இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வாழை சாகுபடி
கரூர் மாவட்டம் லாலாபேட்டை சுற்றுவட்டார பகுதியான கள்ளபள்ளி, பிள்ளபாளையம், கருப்பத்தூர், மேட்டு மகாதானபுரம், கம்மநல்லூர், பொய்கைபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். கற்பூரவள்ளி, பூவன், ரஸ்தாலி உள்ளிட்ட வாழைத்தார்கள் சாகுபடி செய்துள்ளனர். வாழைத்தார்கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. மேலும் சில இடங்களில் வாழைத்தார்கள் மரத்தில் பழுத்து அழுகிய நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட வாழைத்தார்களை விற்பனைக்காக விவசாயிகள் வாழைக்காய் மண்டியில் வைத்து உள்ளனர்.பெரிய அளவில் விலை போகாததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
ஊரடங்கால் பாதிப்பு
இதுபற்றி மண்டியின் உரிமையாளர் கூறுகையில்,லாலாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் வாழைகள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. தார்கள் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் ஊரடங்கால் அறுவடை பணி தேக்கம் அடைந்தது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.இந்நிலையில் விவசாய பணிகளுக்கு தளர்வு அளித்த பின் அறுவடை பணி தொடங்கியது.இதையடுத்து வாழைக்காய் மண்டிக்கு வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
குளித்தலை, அய்யர்மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி சென்றனர். கற்பூரவள்ளி ஒரு தார் ரூ.300-க்கும், பூவன் தார் ரூ.350-க்கும், ரஸ்தாலி ரூ.400-க்கும் ஏலம் போனது. ஊரடங்கால் வாழைக்காய் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மண்டியில் வாழைத்தார்கள் தேங்கி உள்ளன. வெளியூரில் இருந்து வியாபாரிகள் வராததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உள்ளூரில் மட்டும் உள்ளவர்கள் ரூ.100, ரூ.150 என மிக குறைந்த விலையில் வாழைத்தார்களை வாங்கி செல்கின்றனர், என்றார்.
Related Tags :
Next Story