தனியார் மயமாக்குவதை கண்டித்து சென்னை விமான நிலையத்தில் பேனர்


தனியார் மயமாக்குவதை கண்டித்து சென்னை விமான நிலையத்தில் பேனர்
x
தினத்தந்தி 26 May 2020 4:15 AM IST (Updated: 26 May 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மயமாக்குவதை கண்டித்து சென்னை விமான நிலையத்தில் பேனர்கள் கட்டி உள்ளனர்.

ஆலந்தூர்,

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக பயணிகள் விமான சேவைகள் இல்லாமல் சென்னை விமான நிலையம் வெறிச்சோடி கிடந்தது. 2 மாதங்களுக்கு பின்பு நேற்று முதல் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் விமான சேவை தொடங்கியது. 

இதனால் சென்னை விமான நிலையம் மீண்டும் பயணிகள் கூட்டத்தால் கலைகட்ட தொடங்கியுள்ளது. விமான நிலையங்கள் உள்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. இது விமான நிலைய ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விமானநிலையம், விமான நிலைய இயக்குனர் அலுவலக வாசல் போன்ற இடங்களில் தனியார் மயமாக்குவதை கண்டித்து பேனர்கள் கட்டி உள்ளனர். விமான சேவைகள் தொடங்கிய முதல் நாளிலேயே ஊழியர்களின் எதிர்ப்பு பேனர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story