மும்பையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலில் வருபவர்களை தங்க வைக்க 8 இடங்கள் தயார்

மும்பையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலில் வருபவர்களை தங்க வைக்க 8 இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நெல்லை,
மும்பையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலில் வருபவர்களை தங்க வைக்க 8 இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு ரெயில்
கொரோனா பிரச்சினையால் மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து ஏராளமான தமிழர்கள் சொந்த ஊருக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் இருந்து சிறப்பு ரெயிலில் 2,250 பேர் நெல்லை மாவட்டத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த சிறப்பு ரெயில் நேற்று இரவு நெல்லைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரவில்லை. இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடையும் என்று கூறப்படுகிறது.
8 இடங்கள் தயார்
இந்த ரெயிலில் வருபவர்களை தங்க வைத்து அவர்களுக்கு பரிசோதனை செய்ய நெல்லை மாவட்டத்தில் கல்லூரிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபம் என 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
பொன்னாக்குடி ஸ்காட் மருத்துவமனையில் 300 பேரும், அரசு பொறியியல் கல்லூரியில் 300 பேரும், வைகறை திருமண மண்டபத்தில் 200 பேரும், ஜான்ஸ் கல்லூரியில் 150 பேரும், சேவியர் கல்லூரியில் 100 பேரும், சித்த மருத்துவ கல்லூரியில் 200 பேரும், ராணி அண்ணா கல்லூரியில் 500 பேரும், ஐன்ஸ்டீன் பொறியியில் கல்லூரியில் 500 பேரையும் தங்க வைத்து அவர்களுக்கு பரிசோதனை நடத்தி அங்கு அவர்களை தனிமைப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
இந்த இடங்களை கண்காணிக்க தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து உள்ளனர். 8 இடங்களிலும் நேற்று கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story