கட்டுமாவடி, மணமேல்குடியில் மீன் மார்க்கெட்டுகள் மீண்டும் செயல்பட தொடங்கின

கட்டுமாவடி, மணமேல்குடியில் மீன் மார்க்கெட்டுகள் மீண்டும் செயல்பட தொடங்கின.
மணமேல்குடி,
கட்டுமாவடி, மணமேல்குடியில் மீன் மார்க்கெட்டுகள் மீண்டும் செயல்பட தொடங்கின.
மீன் மார்க்கெட்டுகள்
கட்டுமாவடியில் பெரிய அளவிலான மீன் மார்க்கெட் உள்ளது. இப்பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் கம்பெனிகள் செயல் படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும், ஜெகதா பட்டினம், கோட்டைப் பட்டினம், சேதுபாவா சத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மேலும் ராம நாதபுரம், பாம்பன், ராமேசுவரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இங்கு மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்வார்கள். ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு காரணமாக மீன் மார்க்கெட்டுகள் செயல் படாமல் மூடப்பட்டிருந்தன. மேலும் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
சமூக இடைவெளியை பின்பற்றி...
ஆனால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். அவற்றை மீன் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்ய முடியாமல் அவர்கள் தவித்தனர். மேலும் மீன் மார்க்கெட்டுகளில் மீன் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளும், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிப் படைவதால், கட்டுமாவடி மற்றும் மணமேல்குடி மீன் மார்க்கெட்டுகளை திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற மணமேல்குடி வருவாய்த் துறையினர், மீன் ஏலக்கடை உரிமையாளர் களிடம் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கிருமிநாசினி தெளித்தல், தடுப்புகள் அமைத்தல் என பல்வேறு நிபந்தனைகளுடன், ஏலக் கடை செயல்பட அனுமதி அளித்தனர். இதனை அடுத்து கட்டுமாவடி, மணமேல்குடி மீன் மார்க்கெட்டுகள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. நாட்டுப்படகுகளில் பிடித்து வரப்படும் மீன்கள், இறால்கள் மற்றும் நண்டுகள் அதிக அளவில் மீன் மார்க்கெட்டுகளுக்கு விற் பனைக்காக வரப்படுகிறது. அவற்றை வியாபாரிகளும், மீன் பிரியர்களும் முக கவசம் அணிந்து வந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story