பெரம்பலூரில் பிரபல ரவுடி கழுத்தறுத்து படுகொலை 3 பேர் கைது


பெரம்பலூரில் பிரபல ரவுடி கழுத்தறுத்து படுகொலை 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2020 11:50 AM IST (Updated: 9 Jun 2020 11:50 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் பிரபல ரவுடியை கழுத்தறுத்து படுகொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூரில் பிரபல ரவுடியை கழுத்தறுத்து படுகொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழுத்தறுத்து கொலை

பெரம்பலூர் திருநகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வீரமணிகண்டன்(வயது 27). இவர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீரமணிகண்டன் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அவரை வெளியே அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் வெளியே சென்ற வீரமணிகண்டன் வீட்டிற்கு வரவில்லையே என அவரது பெற்றோர் வீரமணிகண்டனை தேடி சென்றனர். அப்போது அவரது வீட்டின் அருகே மர்மநபர்கள் சிலரால் வீரமணிகண்டன் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

3 பேர் கைது

இதையடுத்து வீரமணிகண்டனின் பெற்றோர் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, வீரமணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக பெரம்பலூர் ஆலம்பாடி சாலை புதிய காலனியை சேர்ந்த செல்வராஜ் மகன் டால்டா கண்ணன் என்கிற கண்ணன்(30), திருநகரை சேர்ந்த சுப்பையா மகன் ஆனந்த் என்கிற முருகானந்தம்(39), அரணாரையை சேர்ந்த பாஸ்கர் மகன் பார்த்திபன்(24) ஆகிய 3 பேரை கைது செய்து வீரமணிகண்டன் எதற்காக கொலை செய்யப்பட்டார்?, இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story