பெரிய மார்க்கெட் காய்கறி கடைகளை ஏ.எப்.டி. மைதானத்துக்கு மாற்ற நடவடிக்கை ; கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு

பெரிய மார்க்கெட்டில் இருந்து காய்கறி கடைகளை ஏ.எப்.டி. மைதானத்துக்கு மாற்றுவது தொடர்பாக கலெக்டர் அருண் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
புதுச்சேரி,
புதுவை நேரு வீதியில் பெரிய மார்க்கெட் இயங்கி வந்தது. கொரோனா பரவாமல் தடுக்கும் வகையாக இங்கிருந்த கடைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் புதிய பஸ் நிலையம், லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டன.
இந்தநிலையில் 5-ம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதையொட்டி மீண்டும் பெரிய மார்க்கெட் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கடைகள் அனைத்தும் கடந்த 3-ந் தேதி முதல் இங்கு கொண்டு வரப்பட்டன. அதிகாலையில் மார்க்கெட்டிற்கு காய்கறி, பழங்கள், பூக்கள், மளிகை, மீன் என அனைத்தும் கொண்டு வரப்படுவதால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மீனவர்கள் தற்போது தடைக்காலம் முடிந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். அவர்கள் பிடித்துவரும் மீன்கள் காந்தி வீதி-நேரு வீதி சந்திப்பில் பெரிய மார்க்கெட் அருகே ஏலம் விடப்படுகிறது.
இதன்காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கவும் ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கவும் காய்கறி கடைகள் மற்றும் மீன்கள் ஏலம் விடப்படும் இடங்களை மாற்றுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.
இதையடுத்து பெரிய மார்க்கெட், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி ஆகிய இடங்களில் கலெக்டர் அருண் தலைமையில் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது மீன் மற்றும் காய்கறி கடைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? வியாபாரிகள் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? அனைவரும் முக கவசம் அணிந்துள்ளனரா? என்பதை கண்காணித்தனர்.
இதில் பெரிய மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாதது தெரியவந்தது. எனவே ஏ.எப்.டி. திடலில் காய்கறி கடைகளை மாற்றம் செய்வது தொடர்பாகவும் அங்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்தும் கலெக்டர் அருண் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.

Related Tags :
Next Story