மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 4 அடிக்கு மேல் சிலைகளை பிரதிஷ்டை செய்ய கூடாதுமுதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவு + "||" + Statues of more than 4 feet should not be dedicated First-Minister Uttav Thackeray

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 4 அடிக்கு மேல் சிலைகளை பிரதிஷ்டை செய்ய கூடாதுமுதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவு

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 4 அடிக்கு மேல் சிலைகளை பிரதிஷ்டை செய்ய கூடாதுமுதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவு
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 4 அடிக்கு மேல் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக் கூடாது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மண்டல்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மும்பை

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகுவிமர்சையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படும். தலைநகர் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் பல அடி உயரத்தில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். ஆனந்த சதுர்த்தியின் போது, இந்த பிரமாண்டமான விநாயகர் சிலைகள் சாலைகளில் நீர்நிலைகளை நோக்கி அணிவகுத்து செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.


இந்த ஆண்டு வருகிற ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்குகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விநாயகர் சதுர்த்தியை மிக எளிமையாக கொண்டாட வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி இருந்தார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நமது கலாசாரம் மற்றும் மரபுகளை பாதித்துள்ளது. கூட்டத்தை தவிர்ப்பதற்காக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டு உள்ளன. மும்பை மற்றும் புனேயில் மிகப்பெரிய விநாயகர் சிலைகளை காண மக்கள் திரளுவார்கள். இதை தவிர்க்க இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது, 4 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகளை மட்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதற்கு மேல் உள்ள பெரிய சிலைகளை வைக்க கூடாது. சிலையின் உயரத்தை விட நம்பிக்கையும், பக்தியும் தான் மிக முக்கியம். இது தொடர்பாக விநாயகர் மண்டல்களுடன் பேசி இருக்கிறேன்.

ஆகஸ்டு மாதத்தில் உறியடி திருவிழாவை பெரியளவில் ஏற்பாடு செய்து கொண்டாடும் சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் அந்த கொண்டாட்டத்தை ரத்து செய்த விட்டு, அதற்கு பதிலாக கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விநாயகர் சதுர்த்தி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2. விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும் - பாஜக மாநில தலைவர் முருகன்
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.