குமரி மீனவர்கள் கேரளாவில் சென்று மீன்பிடிக்க நடவடிக்கை தளவாய்சுந்தரத்திடம், மீனவ சங்கத்தினர் வலியுறுத்தல்


குமரி மீனவர்கள் கேரளாவில் சென்று மீன்பிடிக்க நடவடிக்கை தளவாய்சுந்தரத்திடம், மீனவ சங்கத்தினர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 July 2020 4:30 AM IST (Updated: 7 July 2020 2:54 AM IST)
t-max-icont-min-icon

குமரி மீனவர்கள் கேரளாவில் சென்று மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என மீனவ சங்கத்தினர் தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகர்கோவில்

குமரி மீனவர்கள் கேரளாவில் சென்று மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என மீனவ சங்கத்தினர் தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

குமரி மாவட்ட மீனவர்கள் ஜூன், ஜூலை மாத மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஆகஸ்டு 1-ந் தேதி முதல், கேரள மாநிலத்திற்கு மீன்பிடிக்க செல்வார்கள். தற்போது, கொரோனா ஊரடங்கு கேரள மாநிலத்தில் கடைபிடிக்கப்படுவதால், குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், கேரள மாநில அரசிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டி உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய அலுவலகத்தில் நடந்தது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குனர் ஸ்டீபன் மற்றும் பங்குதந்தைகள் முன்னிலை வகித்தனர்.

மீன்பிடிக்க அனுமதி

கூட்டத்தில், கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த பங்குதந்தைகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் ஆகியோர், ஈரான் நாட்டில் தங்கியிருந்த குமரி மாவட்ட மீனவர்களை, பல்வேறு தொடர் நடவடிக்கைகள், முயற்சிகள் மேற்கொண்டு, தாய் தமிழகத்திற்கு அழைத்து வந்ததற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்திற்கும் நன்றி தெரிவித்தனர். மேலும், குமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் கேரளாவில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க முதல்-அமைச்சரை வலியுறுத்தி, உரிய அனுமதி பெற்றுத்தரவேண்டும் எனவும் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story