திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் சிறுமி உடல் கிடந்த இடத்தில் பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ஆய்வு தலையில் காயம் ஏற்பட்டது எப்படி? போலீசார் விசாரணை


திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில்  சிறுமி உடல் கிடந்த இடத்தில் பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ஆய்வு  தலையில் காயம் ஏற்பட்டது எப்படி? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 July 2020 10:38 AM IST (Updated: 9 July 2020 10:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி சோமரசம் பேட்டை பகுதியில் சிறுமி உடல் கிடந்த இடத்தில் பிரேத பரிசோதனை செய்த டாக்டர் போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்தார்.

சோமரசம்பேட்டை, 

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அதவத் தூர்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 45). ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களது 2-வது மகள் கங்காதேவி(14). இவர் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பு செல்ல இருந்தார். 2 நாட்களுக்கு முன்பு கடையில் இருந்து மாயமான கங்காதேவி அருகே உள்ள முள்காட்டில் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்த திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் மேற்பார்வையில் 11 தனிப்படைகள் அமைக் கப்பட்டது. தனிப்படை போலீசார் கங்காதேவியின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரி டமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சிறுமியின் உடல் பிரேதபரிசோதனை முடிக்கப் பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் டாக்டர் ஆய்வு

பிரேதபரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும், தீக்காயங்களால் தான் அவருக்கு இறப்பு ஏற்பட் டுள்ளது என்ற தகவல் தெரியவந்துள்ளது. தொடர் ந்து பிரேத பரிசோதனை செய்த டாக்டர் கார்த்திகேயன் சிறுமி எரிந்து பிணமாக கிடந்த இடத்தில் நேற்று காலை ஆய்வு நடத்தினார். அவருடன் ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கோகிலா, சோமரசம்பேட்டை இன்ஸ் பெக்டர் சிபிசக்கர வர்த்தி மற்றும் தனிப்படை போலீசார் உடன் இருந்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி செல்போன் வைத்து இருந்ததும், அதில் கடைசியாக அதேபகுதியை சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி செந்தில்(24) என்பவருடன் செல்போனில் பேசி இருந்ததும் தெரியவந்தது.

பின்னந்தலையில் காயம்

இது குறித்து போலீசார் கூறுகையில், “அதேபகுதியை சேர்ந்த பங்காளி உறவுமுறை உள்ள டைல்ஸ் தொழிலாளி செந்திலுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தெரிந்ததும் சிறுமியின் குடும்பத்தினர் கண்டித் துள்ளனர். இந்தநிலையில் கங்காதேவி அதேபகுதியை சேர்ந்த ஒருவருடன் செல்போனில் பேசியதை செந்தில் கண்டித்ததாகவும், இதுதொடர்பாக முள்காட்டில் கங்காதேவிக்கும், செந்திலு க்கும் வாக்குவாதம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. அப்போது அவர் கங்கா தேவியை அடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறி உள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் பின்னந்தலையில் காயம் இருந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆகவே அவர் கீழே விழுந்ததில் கல்லில் அடிப்பட்டு பின்னந்தலையில் காயம் ஏற்பட்டதா? என தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

செந்திலின் நண்பரிடமும் விசாரணை

சிறுமி எரிந்து கிடந்த வழக்கில் போலீசாருக்கு மேலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. சிறுமி மண் எண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து இருந்தால் அங்குமிங்கும் அலறி ஓடி இருப்பார். ஆனால் அதற்கான தடயம் எதுவும் இல்லை. மேலும், சிறுமியின் பின்னந்தலையில் காயம் எப்படி வந்தது? சிறுமி யாரிடம் அடிக்கடி போன் பேசியதை செந்தில் கண்டித்தார். அப்படி அவர் செல்போனில் பேசிய நபர் யார்? என துருவி, துருவி விசாரித்து வருகிறார்கள். மேலும், இந்த வழக்கில் செந்திலுடன் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று வரும் அவரது நண்பர் ஒருவரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story