மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு உள்பட 16 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 255 ஆக உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு உள்பட நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு உள்பட நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், நேற்று 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்படி தேன்கனிக்கோட்டை தாலுகா திப்பசந்திரம் பகுதியை சேர்ந்த 27 வயது ஆண், கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 47 வயது போலீஸ் ஏட்டு, மூக்காகவுண்டனூரை சேர்ந்த 42 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஜெகதேவி அம்பேத்கர் தெருவை சேர்ந்த 33 வயது பெண், ஓசூர் பஸ்தி வ.உ.சி. நகரை சேர்ந்த 29 வயது ஆண், கிருஷ்ணகிரி சின்ன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 61 வயது முதியவர், மிட்டப்பள்ளியை சேர்ந்த 55 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
அதேபோல் ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி. ஹட்கோ பகுதியை சேர்ந்த 21 வயது ஆண், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த 32 மற்றும் 54 வயது ஆண்கள், தளி அடுத்த குஞ்சுகிரிபாளையத்தை சேர்ந்த 60 வயது முதியவர் மற்றும் பர்கூர் ஜெகதேவி சாலையை சேர்ந்த 49 மற்றும் 26 வயது 2 வாலிபர்கள் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
255 ஆக உயர்வு
மேலும், காஞ்சீபுரத்தில் இருந்து வந்த கொல்லப்பட்டியை சேர்ந்த 30 வயது ஆண், பெங்களூருவில் இருந்து வந்த கிருஷ்ணகிரி வகாப் தெருவை சேர்ந்த, 20 வயது வாலிபர், ஓசூர் கொல்லர் தெருவை சேர்ந்த 52 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு ‘சீல்‘ வைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இவர்கள் ஓசூர், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் 16 பேர் வசித்து வந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story