தடியன்குடிசை-புல்லாவெளி இடையே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்


தடியன்குடிசை-புல்லாவெளி இடையே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
x
தினத்தந்தி 14 July 2020 12:26 AM GMT (Updated: 14 July 2020 12:26 AM GMT)

பெரும்பாறை, தாண்டிக்குடி இடையே மலைப்பாதை உள்ளது. இதன் வழியாக திண்டுக்கல், வத்தலக்குண்டு, மதுரை, பண்ணைக்காடு, கொடைக்கானல், கே.சி.பட்டி, பன்றிமலை ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

பெரும்பாறை,

தடியன்குடிசை-புல்லாவெளி இடையே 6.2 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிதாக தார்சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், பெரும்பாறை அருகே உள்ள கொங்கப்பட்டி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்தது.

அப்போது, சாலை அமைக்கும் பணி தரம் இல்லாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து கொங்கப்பட்டி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

மேலும் அந்த பகுதியில் வடிகால் வசதியுடன் பாலம் அமைக்க வேண்டும், மலைப்பாதையில் அனைத்து இடங்களிலும் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும். தரமான முறையில் தார்சாலை அமைக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தரமான முறையில் சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கி நடந்தது.

Next Story