கொல்லிமலையில் பெண் கொலையில் சிறுவன் கைது

கொல்லிமலையில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டான்.
சேந்தமங்கலம்,
கொல்லிமலை குண்டலிநாடு ஊராட்சி கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நடேசன். இவரது மனைவி தீபா (வயது 24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று துணி துவைத்துவிட்டு, மாடு மேய்த்து விட்டு வருகிறேன் என்று தீபா வீட்டில் கூறிவிட்டு, கீரைக்காடு வனப்பகுதிக்கு சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் மறுநாள் காலை கீரைக்காடு வனப்பகுதியில் அவர் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங்களுடன், வாயில் துணி வைத்து கட்டப்பட்டு, நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அவர் கற்பழித்து, கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வாழவந்திநாடு போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் தீபாவின் செல்போன் மாயமானதும், அந்த செல்போனை திண்டூர்நாடு ஊராட்சி தென்னங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவனை பிடித்து விசாரித்தபோது, தீபா தனிமையில் வனப்பகுதிக்கு சென்றதை பார்த்து அவரை உல்லாசத்துக்கு அழைத்ததும், அவர் மறுத்ததால் அவரை கற்பழித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story