பிளஸ்-2 தேர்வில் தோல்வி: தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

பூம்புகார் அருகே பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவெண்காடு,
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி தெற்கு தெருவை சேர்ந்த பக்கிரி மகள் புவனேஸ்வரி(வயது 17). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த புவனேஸ்வரி, பிளஸ்-2 தேர்வு எழுதி விட்டு முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. இதில் புவனேஸ்வரி தோல்வி அடைந்தார்.
இதனால் விரக்தி அடைந்த அவர், நேற்று முன்தினம் தூக்குப்போட்டு கொண்டார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.
ஆசிரியர்கள்-மாணவர்கள் அஞ்சலி
இதுகுறித்து பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், குமரேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த மாணவிக்கு, சக மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :
Next Story