பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு


பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 12 Aug 2020 9:17 AM IST (Updated: 12 Aug 2020 9:39 AM IST)
t-max-icont-min-icon

பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

சென்னை,

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 14 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 120 நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் எனவும்  24 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசன வசதி கிடைக்கும் என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story