பல்லாரியில் உருக்கம் முதியவர் பட்டினியால் உயிரிழந்தார் கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருந்தவருக்கு நேர்ந்த சோகம்

பல்லாரியில், கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருந்த முதியவர் உணவு கிடைக்காமல் பட்டினியால் உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
பல்லாரி,
பல்லாரி அருகே டி.பிலகள்ளு கிராமத்தில் வசித்து வந்தவர் 60 வயது முதியவர். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பல்லாரி அருகே கொட்டூர் கிராமத்தில் வசித்து வரும் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு டி.பிலகள்ளுவுக்கு திரும்பி இருந்தார். இந்த நிலையில் அந்த முதியவர் காய்ச்சல், சளி தொல்லையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அந்த முதியவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது.
அந்த பரிசோதனை அறிக்கையின் முடிவு கடந்த 15-ந் தேதி வெளியானது. இதில் முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் சுகாதாரத்துறையினர், முதியவரை தொடர்பு கொண்டு உங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. உங்கள் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கிறோம். நீங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து விடுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த முதியவர் நான் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு சுகாதாரத்துறையினரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து அந்த முதியவர் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வந்து உள்ளார்.
இதற்கிடையே முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவரது மகன், மருமகள், மகள் ஆகியோர் முதியவரை தனியாக விட்டுவிட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. மேலும் அந்த முதியவருக்கு சரியான நேரத்தில் உணவும் வழங்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அந்த முதியவர் சரியாக உணவு கிடைக்காமல் பட்டினியாக கிடந்துள்ளார். மேலும் கொரோனா பீதியால் அந்த முதியவருக்கு உதவ அக்கம்பக்கத்தினரும் முன்வரவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த முதியவர் பட்டினியால் மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்து செத்தார். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று முதியவரின் உடலை எடுத்து சென்று மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் உணவு கிடைக்காமல் பட்டினியால் முதியவர் இறந்த சம்பவம் பல்லாரியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பாதித்த முதியவருக்கு மருத்துவ குழு சிகிச்சை அளிக்க செல்லவில்லையா? என்பது குறித்தும், பசியால் இறந்தது குறித்தும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு, பல்லாரி மாவட்ட கலெக்டர் நகுலும் உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அவர் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற விரும்பினார். இதனால் தான் அவரை வீட்டு தனிமையில் வைத்து சிகிச்சை அளித்தோம். அவரை குடும்பத்தினர் தனியாக வீட்டு சென்று உள்ளனர். இதுபற்றி விசாரிக்க அப்பகுதியை சேர்ந்த ஆஷா ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

Related Tags :
Next Story