முன் குறுவை சாகுபடிக்காக கருப்பாநதி, அடவிநயினார், ராமநதி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்பு

முன்குறுவை சாகுபடிக்காக கருப்பாநதி, அடவிநயினார், ராமநதி அணைகளில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்றார்.
அச்சன்புதூர்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி முன்குறுவை சாகுபடிக்காக தென்காசி மாவட்டம் கருப்பாநதி, அடவிநயினார், ராமநதி அணைகளில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. கடையநல்லூர் அருகே அமைந்துள்ள 72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 70.5 அடியாக உள்ளது.
அணையில் இருந்து நேரடி கால்வாய் மூலம் 1,082.23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 97 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 25 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் கடையநல்லூர் தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் உள்ள பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால் விவசாயிகள் நேரடியாக நீர்ப்பாசனம் பெறுவார்கள்.
அணை திறப்பு நிகழ்ச்சிக்கு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி, செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் சங்கர் ராஜ், மணிகண்ட ராஜன், உதவி பொறியாளர் ஆனந்த், கார்த்திகைதேவி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை அருகே மேக்கரையில் உள்ள அடவிநயினார் அணையில் இருந்து நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த அணை மூலமாக மேட்டுக் கால்வாய், கரிசல் கால்வாய், பண்பொழி கால்வாய், வல்லாக்குளம் கால்வாய், சாம்பவர்வடகரை கால்வாய் மற்றும் இரட்டைகுளம் கால்வாய்கள் மூலமாக 7,243.15 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
132 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 131.5 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 60 கன அடி வீதம் 90 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் சிற்றாற்று வடிநில கோட்ட உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செயலர் ஜாகிர் உசேன், அடவிநயினார் நீர்த்தேக்க நீரை பயன்படுத்துவோர் சங்க முன்னாள் தலைவர் செல்லத்துரை, மேட்டுக் கால்வாய் சங்க முன்னாள் தலைவர்கள் பிச்சைகண் மற்றும் வடகரை, மேக்கரை, இலத்தூர், சாம்பவர்வடகரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கடையம் அருகே உள்ள ராமநதி அணையில் இருந்து நேற்று பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 1008.19 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசனம் பெறுகின்றன. 97 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 60 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Related Tags :
Next Story