மன்னார்குடியில், டாஸ்மாக் கடையில் ரூ.60 ஆயிரம் மதுபாட்டில்கள்-பணம் கொள்ளை - மர்ம மனிதர்கள் கைவரிசை

மன்னார்குடியில், டாஸ்மாக் கடையில் புகுந்த மர்ம மனிதர்கள், கடையில் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
மன்னார்குடி,
திருவாருர் மாவட்டம் மன்னார்குடி பெரிய கடை தெருவில் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. நேற்று முன்தினம் முழு அடைப்பு என்பதால் இந்த கடை மூடப்பட்டு இருந்தது. நேற்று காலை வழக்கம்போல் கடையின் மேற்பார்வையாளர் வெற்றிச்செல்வன் என்பவர் கடையை திறந்துள்ளார்.
அப்போது கடையின் அருகில் உள்ள பாரின் பின்பக்க வழியாக மதுக்கடைக்குள் மர்ம மனிதர்கள் நுழைந்து கடைக்குள் இருந்த 495 மதுபாட்டில்களையும், மேஜை டிராயரில் இருந்த ரூ.40 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.60 ஆயிரம் என தெரிகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் வெற்றிச்செல்வன் மன்னார்குடி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த டாஸ்மாக் கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்பார்வையாளர் மற்றும் அந்த கடையில் பணிபுரிந்து வரும் 3 ஊழியர்கள் உள்பட 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள்-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story