ஊரப்பாக்கம் அருகே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தொழிலாளி தற்கொலை - ஊரடங்கால் குடும்பம் வறுமையில் வாடியதால் விபரீதம்

ஊரப்பாக்கம் அருகே ஊரடங்கால் குடும்பம் வறுமையில் வாடியதால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்,
கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் சந்தோஷ்குமார் (வயது 58). கூலித்தொழிலாளியான இவர், தற்போது செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி அர்ஜுனன் தெருவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது மனைவி சுமதி.
இவர்களுக்கு சற்று மனநலம் குன்றிய சிவநிதி (12) என்ற மகனும், சரண்தாஸ் (8) என்ற மற்றொரு மகனும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாத காரணத்தால், இவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. இந்த நிலையில் தொடர்ந்து வேலை இல்லாததால் இனிமேல் குடும்பத்தை காப்பாற்ற முடியாது என்ற எண்ணத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதற்கு சந்தோஷ்குமார் முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் மாலை தனது 2 மகன்களையும் கடைக்கு அழைத்து சென்று குளிர்பானம் வாங்கினார். அந்த குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து வீட்டின் அருகே செல்லும்போது தனது 2 மகன்களுக்கும் எலி மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து விட்டு, தானும் அந்த குளிர் பானத்தை குடித்தார்.
பின்னர் அவர்கள் 3 பேரும் குளிர்பான பாட்டிலுடன் வீட்டுக்கு சென்றனர். பின்னர் தனது கையில் வைத்திருந்த குளிர்பானத்தை தனது மனைவி சுமதியிடம் கொடுத்து குடிக்குமாறு சந்தோஷ் குமார் கூறியுள்ளார். அப்போது ஏற்கனவே எலி மருந்து கலந்த குளிர்பானத்தை குடித்த 2 மகன்கள் திடீரென மயங்கி கீழே விழுந்தனர். இது குறித்து தனது கணவரிடம் சுமதி கேட்டபோது அவரும் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து சிவநிதி, சரண்தாஸ் இருவரையும் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story