ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்


ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2020 8:39 AM IST (Updated: 26 Aug 2020 8:39 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணியில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி, 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட இணை செயலாளர் பாஸ்கரன் தலைமையில் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில முடிவின்படி ‘கோவிட்-19’ பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணியில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும், ஏற்கனவே நிலுவையில் உள்ள கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும், கோவை மாவட்டத்தில் 4 ஊழியர்களின் மாவட்ட மாறுதல்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,

இன்றும் தொடரும்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சட்டுக்களையும் (17-பி) உடனடியாக ரத்து செய்ய வேண்டும், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு, ஏனைய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளை வழங்க வேண்டும், கணினி உதவியாளர்கள், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், இணை இயக்குனர், உதவி இயக்குனர் பதவி உயர்வு ஆணைகளை உடனே வழங்க வேண்டும், உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மாநில தணிக்கையாளர் பி.செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.அன்பழகன், மாவட்ட இணை செயலாளர் விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், வட்ட கிளைத் தலைவர் கற்பகம் உள்பட நிர்வாகிகள், அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டம் இன்றும் (புதன் கிழமை) நடக்கிறது.

Next Story