பிறந்த நாள் விழா: பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
மதுரை,
வாடிப்பட்டியில் தி.க., அ.ம.மு.க., ஆதித்தமிழர் பேரவை, விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் தந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பு தந்தை பெரியார் வளாகம் மற்றும் குட்லாடம்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் திராவிட கழகம் சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எரிமலை கொடியேற்றினார். ஆதித்தமிழர் பேரவை சார்பாக நடந்த விழாவிற்கு வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். தி.மு.க. பேரூர் செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். முன்னாள் பேரூர் செயலாளர் பால்பாண்டியன் பெரியார் படத்திற்கு மலர்தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
சோழவந்தானில் தி.மு.க. சார்பில் வடக்கு ரத வீதியில் பெரியார் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் நகர செயலாளர் முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விக்கிரமங்கலம் கிராமத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு ஒன்றிய செயலாளர் எம். வி.பி.ராஜா பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. சார்பில் பெரியார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
உசிலம்பட்டி அருகே உள்ள சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் பவுன் தலைமையில் பகுத்தறிவு கழக தலைவர் மன்னர் மன்னன், ம.தி.மு.க. ஜெ.டி.குமார், ஆதித்தமிழர் பேரவை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் விடுதலை சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தானில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகர செயலாளர் சத்யபிரகாஷ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ராமநாதன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ராஜன் பெரியார் உருவ படத்திற்கு மாலை அணிவித்தார். எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் பிறந்தநாளையொட்டி மதுரை மாநகராட்சி அருகே உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் நகர பொருளாளர் ராஜா, துணைச்செயலாளர் தங்கம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் மற்றும் அ.தி.மு.க.வினர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பில் மாநகர மாவட்ட பொறுப்பு குழு தலைவர் தளபதி, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், வேலுச்சாமி, திராவிடர்கழகம் சார்பில் மாநில பிரசார குழு தலைவர் எடிசன் ராஜா, தே.மு.தி.க. சார்பில் வடக்கு மாநகர மாவட்ட செயலாளர் கவியரசு, அவைத்தலைவர் செல்வகுமார் மாலை அணிவித்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.ம.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story