மாவட்டத்தில், டாக்டர் உள்பட 66 பேருக்கு கொரோனா பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று டாக்டர் உள்பட 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று மாவட்டத்தில் டாக்டர் உள்பட 66 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பென்னாகரத்தை சேர்ந்த 36 வயது டாக்டருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று உறுதியானது.
இதேபோல் தர்மபுரி ஊரக வளர்ச்சி முகமை அலுவலக ஊழியர், துரைசாமி தெரு, குப்பூர், பில்பருத்தி, காரிமங்கலம், மாட்லாம்பட்டி, மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதேபோல் தர்மபுரியை சேர்ந்த 35 வயது போலீஸ்காரர், கோவிலூரை சேர்ந்த 36 வயது பெண் ஆய்வக பணியாளர் உள்பட 66 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் குடும்பத்தினரை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,211 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story