கோரிக்கைகளை வலியுறுத்தி: அரசு ஊழியர்களின் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் வெறிச்சோடிய அலுவலகங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடி இருந்தன.
கரூர்,
கரூர் மாவட்ட அனைத்து அரசு துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாநில மையம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களையும் சித்திக் குழுவினரின் பரிந்துரைப்படி அரசாணை வெளியிட வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
முன்னாள் மாநில தலைவர் சுப்ரமணியனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு கால முறை ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல, தோகைமலை ஒன்றிய அலுவலகத்திலும் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story