தேனி அருகே பள்ளப்பட்டியில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசனம் பெறும் விவசாயிகளின் கனவு திட்டம் நிறைவேறுமா?

தேனி அருகே பள்ளப்பட்டியில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் சுமார் ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் நேரடி பாசனம் பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த கனவு திட்டம் நிறைவேறுமா? என்று விவசாயிகள் 15 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
தேனி,
தேனி அருகே அரண்மனைப்புதூர் ஊராட் சிக்கு உட்பட்ட கிராமமாக பள்ளப்பட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத் திற்கும் குன்னூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இடையே வைகை ஆறு செல்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வைகை ஆற்றில் ஆண்டுக்கு 8 முதல் 10 மாதங்கள் வரை நீரோட்டம் இருந்தது.
மூலவைகையின் மழை ஆதாரமாக இருந்த மேகமலை, வருசநாடு மலைப்பகுதிகளில் இயற்கை வளங்கள் பறிபோனதன் விளைவாக ஆற்றில் நீரோட்டம் குறைந்தது. பலத்த மழை பெய்யும் போது ஆற்றில் நீரோட்டம் இருப் பதும், பருவமழைக்காலம் முடிந்த ஓரிரு மாதங் களில் நீர்வரத்து முற்றிலும் நின்று விடுவதும் கடந்த 20 ஆண்டுகால நிகழ்வாக உள்ளது. இதனால் பள்ளப்பட்டி, அம்மச்சியாபுரம், கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதூர், அய்யனார்புரம், குன்னூர் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைந் தது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது. இதன் விளைவாக விவசாயத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அம்மச்சியாபுரம், குன்னூர், பள்ளப்பட்டி, கொடுவிலார்பட்டி, அய்யனார்புரம் போன்ற பகுதிகளில் நெல் சாகுபடி நடந்த நிலங்கள் பெரும்பாலும் குறுகிய கால பயிர் சாகுபடிக்கு மாற்றப்பட்டன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்த தால் கோடை காலத்தில் கிணறுகளும் வறண்டு போகும் நிலைமை உருவாகின. இதனால் பள்ளப்பட்டியில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
கடந்த 15 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்து அரசு துறை அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்த தடுப்பணை கட்டப்பட்டால் பள்ளப்பட்டி, அம்மச்சியா புரம், குன்னூர், அய்யனார்புரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுமார் 1000 ஹெக் டேர் விளை நிலங்கள் நேரடி பாசன வசதி பெற வாய்ப்புள்ளது. இதன் மூலம் பயிர் சாகு படி பன்மடங்கு பெருகும் வாய்ப்புள்ளது.
விவசாயிகளின் தொடர் கோரிக்கையால் கடந்த சில ஆண்டுகளாக இங்கு தடுப்பணை கட்டுவதற்கு பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளப்பட்டி மயானம் அருகில் தடுப்பணை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் பின்னர் பல மாதங்கள் ஆகியும் தடுப்பணை கட்டுவதற்கான திட்டம் குறித்த அறிவிப்பு, நிதி ஒதுக்கீடு எதுவும் நடக்கவில்லை.
இதுகுறித்து பள்ளப்பட்டியை சேர்ந்த விவ சாயிகள் கூறும்போது, “இந்த தடுப்பணை என்பது பள்ளப்பட்டி மக்களின் கனவு திட்ட மாகும். இந்த கனவை சுமந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறோம். இங்கு வைகை ஆற்றை வழிமறித்து தடுப்பணை கட்டினால் ஆற்றின் இருபகுதிகளிலும் சுமார் ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெறும். இதில் சுமார் 600 ஹெக்டேர் நிலங்கள் நெல் சாகுபடி நிலங்கள் ஆகும். அத்துடன் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணற்றுப் பாசனம், ஆழ்குழாய் கிணற்றுப் பாசனம் மூலம் பாசன பரப்பளவும், பயன்பாடும் மேலும் அதிகரிக்கும். ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத் தொடரின் போதும் இந்த தடுப்பணை குறித்த அறிவிப்பு வராதா என எதிர்பார்த்து ஏமாற்றம் மட்டுமே அடைந்து வருகிறோம். எனவே தடுப்பணை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் தடுப்பணை கட்ட வேண்டும்” என்றனர்.

Related Tags :
Next Story