கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.1¼ கோடியில் வளர்ச்சி பணிகள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்


கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.1¼ கோடியில் வளர்ச்சி பணிகள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Oct 2020 7:37 AM IST (Updated: 4 Oct 2020 7:37 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.1¼ கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை,

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 92-வது நரசிம்மபுரம், பாலக்காடு சாலையில் சட்டமன்ற உறுப் பினர் மேம்பாட்டு நிதியி லிருந்து ரூ.15 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக் கும் பணி, கோவைப்புதூர் பிரிவு, இ.பி.காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியி லிருந்து ரூ.52 லட்சத்தில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி, சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் ரூ.16.80 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.1 கோடியே 31 லட்சத்து 30 ஆயிரத்தில் வளர்ச்சி பணி களுக்கு பூமி பூஜை நடை பெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பணிகளை தொட ங்கி வைத்தார்.

தொடர்ந்து கோவை அன்புநகர் பகுதியில் ரூ.7.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை, குள த்துப்பாளையம் பகுதியில் ரூ.19.80 லட்சத்தில் அமைக்கப் பட்ட சத்துணவு கூடம் ஆகியவற்றையும், கோவைப்புதூர் பிரிவில் சேலம்-கொச்சின் சாலையில் ரூ.47½ லட்சத்தில் நடைபாதை அமைக்கும் பணி மற்றும் கோவை மாநகராட்சி 89-வது சுண்டக் காமுத்தூர், அன்புநகர் பகுதியில் சட்டமன்ற உறுப் பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை, குளத்துப் பாளையம் பகுதியில் ரூ.19.80 லட்சத்தில் அமைக்கப் பட்ட சத்துணவு கூடம் ஆகிவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட விநாயகர் கோவில் வீதி பி.கே.புதூர், பள்ளி வீதி, ஆசாத் நகர், சாரமேடு மெயின் ரோடு, பிலால் எஸ்டேட், அல் அமீன் காலனி ஆகிய பகுதிகளில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பினையும், கபசுரக் குடிநீரும் பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் உழைக்கும் மகளிர்க்கு ரூ.25 ஆயிரம் மானியத்துடன் கூடிய அம்மா இரு சக்கர வாகனங்களை 50 மகளிர் களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

முன்னதாக கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 91-வது வார்டு சுகுணாபுரம் மேற்கு, பாலக்காடு மெயின் ரோடு பகுதியில் முஸ்லிம் சமுதாயத்தினருக்காக ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் சுமார் 1.75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் (கபர்ஸ்தான்) மயானத்தின் பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிபார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் மதுராந்தகி, மாநகர பொறியாளர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் செல்வராசு, செயற் பொறியாளர் ஞானவேல் மற்றும் உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மண்டல சுகாதார அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Next Story