பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 6 Oct 2020 10:45 PM GMT (Updated: 7 Oct 2020 2:39 AM GMT)

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருவாரூரில் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

பாபர் மசூதி இடிப்பு வழக்கை சி.பி.ஐ. மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், உத்தரபிரதேசத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இதற்கு பொறுப்பு ஏற்று உத்தரபிரதேச அரசு பதவி விலக வலியுறுத்தியும் திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் தமயந்தி, இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் மாதர் சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் சுலோச்சனா, மாவட்ட துணைத்தலைவர் தமிழ்செல்வி, கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, மன்னார்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா, மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story