அய்யர்மலை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம் நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை
குளித்தலை அய்யர்மலை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றி நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அய்யர்மலை பகுதியில் சாலையோரம் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பலர் அப்பகுதியிலுள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இந்த சாலையோரம் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது.
இதனால் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதியை கடந்த 25-ந்தேதிக்குள் அவர்களே அகற்றிக்கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்பை எடுக்கவில்லை எனில் சட்டப்படி காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.
அகற்றம்
அதன்படி நேற்று அய்யர்மலை பகுதியிலுள்ள தெப்பக்குளத்தில் இருந்து பாம்பன் குளம் வரை உள்ள கடைவீதி பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story