புதிதாக நியமனம் செய்யப்பட்ட தி.மு.க. பொறுப்பாளர்களுக்கு தர்மபுரியில் வரவேற்பு


புதிதாக நியமனம் செய்யப்பட்ட தி.மு.க. பொறுப்பாளர்களுக்கு தர்மபுரியில் வரவேற்பு
x
தினத்தந்தி 3 Nov 2020 9:52 AM IST (Updated: 3 Nov 2020 9:52 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்களுக்கு தர்மபுரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது இதைத்தொடர்ந்து அவர்கள் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்ட தி.மு.க. நிர்வாக காரணங்களாலும், கட்சி பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காகவும் இரண்டாக பிரிக்கப்பட்டு தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தர்மபுரி கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளராக தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. மற்றும் 9 மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதேபோல் தர்மபுரி மேற்கு மாவட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளராக பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ. மற்றும் 7 மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின்பேரில், பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. இந்த புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு தர்மபுரியில் நேற்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் தர்மபுரியில் உள்ள பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொண்டர்கள் வாழ்த்து

பின்னர் தர்மபுரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ.வுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர் அன்பழகன், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.சி.துரைசாமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, சந்திரமோகன், தங்கமணி, முனிராஜ், வாசுதேவன், திருமால் செல்வன், தனேந்திரன், சிவன், பூங்கொடி உள்ளிட்ட ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story