தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயலுக்கு 34 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு இழப்பீடு வழங்க கோரிக்கை
தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயலுக்கு இதுவரை 34 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்கு தயாரான பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப்பருவமழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக மழை பெய்யத்தொடங்கியது. அதன் பின்னர் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாகவும் மழை பெய்தது. ஆனால் நிவர் புயல் காரணமாக எந்தவித பாதிப்பும் இல்லை.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. நேற்று காலை முதல் மழை இன்றி காணப்பட்டது. ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில நேரங்களில் லேசான தூறல் காணப்பட்டது.
34 ஆயிரம் ஏக்கர் பாதிப்பு
இந்த தொடர் மழையின் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நெற்பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்தன. மாவட்டத்தில் இதுவரை 34 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் மழைநீர் இன்னும் தேங்கி உள்ளது. மேடான பகுதிகளில் மட்டும் தண்ணீர் வடிந்து காணப்படுகிறது.
தாழ்வான பகுதிகளில் மூழ்கியுள்ள பயிர்கள் தொடர்ந்து 4 நாட்களுக்கு மேல் நீடிப்பதால் அழுகிய நிலையில் காணப்படுகிறது. இதே போல் அறுவடைக்கு தயாரான 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நெற்பயிர்கள் சாய்ந்து முளைத்துள்ளன. சில இடங்களில் சாய்ந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அழுகிய நிலையில் காணப்படுகின்றன.
கடுமையான சேதம்
கதிர் முற்றிலும் விளைந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் அவை அனைத்தும் உதிரும் நிலை உள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டைகள் வரை நெல் கிடைக்கும் என்றிருந்த நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக ஏக்கருக்கு 5 முதல் 10 மூட்டைகள் வரை தான் நெல் கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதே போல 75 எக்கரில் நிலக்கடலை பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மழைக்கு 95 கால்நடைகள் இறந்துள்ளன. 3 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக ஏரி, குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 642 ஏரி, குளங்களில் 427 ஏரி, குளங்கள் நிரம்பி விட்டன. மீதமுள்ள ஏரி, குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.
798 வீடுகள் சேதம்
இதே போல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 381 ஏரி, குளங்கள் உள்ளன. இதில் 1,869 ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. இதர குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. மழை காரணமாக பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் ஆறுகளில் நிறுத்தப்பட்டதால் மழைநீர் வடிந்து வருகின்றன. இதனால் வடிகால் வாய்க்கால்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர்மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. மாவட்டத்தில் 31 குடிசை வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்தன. 602 குடிசை வீடுகள் பகுதியாக சேதம் அடைந்தன. 165 ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. மொத்தம் 798 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
மழை அளவு
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவுமில்லி மீட்டரில் வருமாறு:-
அதிராம்பட்டினம் 43, பேராவூரணி 43, மதுக்கூர் 39, நெய்வாசல் தென்பாதி 26, அணைக்கரை 26, பட்டுக்கோட்டை 24, மஞ்சளாறு 21, கும்பகோணம் 17, திருவிடைமருதூர் 16, அய்யம்பேட்டை 14, குருங்குளம் 12, தஞ்சை 11, திருவையாறு 9, பாபநாசம் 8, ஒரத்தநாடு 7, ஈச்சன்விடுதி 7, வெட்டிக்காடு 7, வல்லம் 4, பூதலூர் 4, திருக்காட்டுப்பள்ளி 3.

Related Tags :
Next Story